
இந்தியாவின் 15வது மக்களவை பொதுத் தேர்தல் 5 கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 2009-ஆம் ஆண்டின் பொதுத் தேர்தல் 30 ஆண்டுகளுக்குப்பிறகு மாற்றியமைக்கப்பட்ட தொகுதிகளைக் கொண்டு நடத்தப்பட இருக்கிறது. உத்திரப் பிரதேசம் (80), மகாராட்டிரம் (48), மேற்கு வங்காளம் (42), ஆந்திரப் பிரதேசம் (42), பீகார் (40), தமிழ்நாடு (39) ஆகிய மாநிலத்தில் இருப்பவர்கள் அதிகமானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மே 16 அன்று வாக்குகளும் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. ஜூன் 2 அன்று பெரும்பான்மை பெற்ற கட்சி அல்லது கூட்டணி ஆட்சியமைக்க அழைக்கப்படும்.
கால அட்டவணை
ஏப்ரல் 16, ஏப்ரல் 23, ஏப்ரல் 30, மே 7, மே 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மணிப்பூரில் ஏப்ரல் 23 உள்ளூர் விடுமுறை ஆதலால் ஒரு நாள் முன்னதாக ஏப்ரல் 22 அன்று தேர்தல் நடைபெறும்.
ஜம்மு காஷ்மீர், உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 5 கட்டங்களிலும், பீகாரில் நான்கு கட்டங்களிலும், மகாராட்டிரம், மேற்கு வங்காளத்தில் மூன்று கட்டங்களிலும், ஆந்திரப்பிரதேசம், அசாம், ஜார்கண்ட், கர்நாடகா, மத்திய பிரதேசம், மணிப்பூர், ஒரிசா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 2 கட்டங்களிலும் மற்ற மாநிலங்களில் ஒரே கட்டத்திலும் தேர்தல் நடைபெறும்.
முதல் கட்டம் - ஏப்ரல் 16 - அந்தமான் நிக்கோபார் தீவுகள், அருணாசலப் பிரதேசம், சத்தீஸ்கர், கேரளம், லட்சத்தீவுகள், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ஆந்திரப் பிரதேசம், அஸ்ஸாம், ஜார்க்கண்ட், மணிப்பூர், ஒரிசா, மகாராட்டிரம், பீகார், ஜம்மு காஷ்மீர், உத்திரப் பிரதேசம்
இரண்டாம் கட்டம் - ஏப்ரல் 23 - கோவா, திரிபுரா, ஆந்திரப் பிரதேசம், அஸ்ஸாம், ஜார்க்கண்ட், மணிப்பூர், ஒரிசா, கர்நாடகம், மத்தியப் பிரதேசம், மகாராட்டிரம், ஜம்மு காஷ்மீர், உத்திரப் பிரதேசம்.
மூன்றாம் கட்டம் - ஏப்ரல் 30 தமன் தியூ, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, குஜராத், சிக்கிம், கர்நாடகம், மத்தியப் பிரதேசம், மகாராட்டிரம், மேற்கு வங்காளம், பீகார், ஜம்மு காஷ்மீர், உத்திரப் பிரதேசம்.
நான்காம் கட்டம் - மே 7 - தில்லி, அரியானா, இராஜஸ்தான், பஞ்சாப், மேற்கு வங்காளம், பீகார், ஜம்மு காஷ்மீர், உத்திரப் பிரதேசம்.
ஐந்தாம் கட்டம் - மே 13 - சண்டிகர், இமாச்சலப் பிரதேசம், புதுச்சேரி, தமிழ்நாடு, உத்தராகண்டம், பஞ்சாப், மேற்கு வங்காளம், ஜம்மு காஷ்மீர், உத்திரப் பிரதேசம்.






