சார்ஜா: துபாயில் தகவல் தொழில்நுட்ப என்ஜினியராக பணியாற்றி வரும் அன்சர் முகமது அலி என்பவரின் மனைவி பர்வீனை (வயது 22) கடந்த 25ம் தேதி முதல் காணவில்லை.
துபாய்க்கு புதியவரான இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் சார்ஜா வந்து கணவருடன் வசித்து வந்தார்.
இந் நிலையில் பர்வீனை கடந்த மே 25ம் தேதி காலை சுமார் 10 மணி முதல் காணவில்லை.
இது தொடர்பாக கடந்த மே 25ம் தேதி சார்ஜா போலீசிலும், 28ம் தேதி துபாயில் இருக்கும் இந்திய துணை தூதரகத்திலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இவரை பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 050 628 1347 (ஜிலானி) மற்றும் 050 626 4906 (ஜாபர் அலி) என்ற இந்த இரண்டு எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
அன்பு வாசகர்களே, இந்த சகோதரி அவர்களின் பெற்றோருக்கும் ,கணவருக்கும் நல்லப்படியாக திரும்ப கிடைப்பதற்க்கு துஆ செய்யுங்கள் |