தஞ்சையில் ஆள் மாறாட்டம் செய்து காவலர் தேர்வு எழுதியவர் கைது
தஞ்சாவூர், அக். 25: தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வில், ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியவரை போலீஸôர் கைது செய்தனர். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய குழுமம் சார்பில், இரண்டாம் நிலை காவலருக்கான எழுத்துத் தேர்வு தஞ்சாவூர் சரபோஜி
அரசுக் கலைக் கல்லூரி, பாரத் அறிவியல் மற்றும் கலைக் கல்லூரி, குந்தவை நாச்சியார் பெண்கள் மகளிர் கல்லூரி, கமலா
சுப்பிரமணியன் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆகிய 4 மையங்களில் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 1,016 பெண்கள் உள்பட 4,671 பேர் தேர்வெழுதினர். சரபோஜி கல்லூரியில் பேராவூரணி வட்டம், தி
ருச்சிற்றம்பலம் மேலக்காடு பகுதியைச் சேர்ந்த சின்னதுரை மகன் ராஜா (27) என்பவருக்காக, திருச்சிற்றம்பலம் மடத்துக்காடு பகுதியைச்
சேர்ந்த சின்னப்பா மகன் ராஜா (28) ஆள் மாறாட்டம் செய்து தேர்வெழுதியது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆள் மாறாட்டம் செய்து தேர்வெழுதிய ராஜாவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலைய போலீஸôர் கைது செய்து
விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தேர்வு மையங்களில் தஞ்சை சரக டிஐஜி அபய் குமார்சிங், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கே.ஏ. செந்தில்வேலன், கூடுதல் எஸ்பி
ராஜேந்திரன், மாவட்ட குற்றப் பதிவேடுகள் பிரிவு டிஎஸ்பி. பாலு, வல்லம் டிஎஸ்பி வசுந்தரா ஆகியோர் கண்காணிப்புப் பணியில்
ஈடுபட்டனர்.







