தஞ்சையில் மனிதநேய மக்கம் கட்சியினர் 19 பேர் கைது
தஞ்சை நகர மனித நேய மக்கம் கட்சி சார்பில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி மதுக்கடை முன்பு மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி மாவட்ட செயலாளர் கலந்தர் தலைமையில் மனித நேய மக்கம் கட்சியினர் நேற்று தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் நகர செயலாளர் அப்துல்மஜீத், மாவட்ட துணை செயலாளர் அதிரை சாகுல், த.மு.மு.க. மாவட்ட தலைவர் அப்துல்ஜப்பார் உம்பட பலர்கலந்து கொண்டனர். பின்னர் அவர்கம் அங்கிருந்து மதுக்கடை முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக புறப்பட்ட போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதில் மனித நேய மக்கம் கட்சியினர் 19 பேர் கைது செய்யப்பட்டனர்.







