
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வழுத்தூர் கிளையில் 24.02.10 வியாழக்கிழமை அன்று வழுத்தூர் சுன்னத் ஜமாஅத் நிர்வாகிகளை சந்தித்து பள்ளிவாசல்களில் மௌலீது ஓதுவதை தடை செய்ய மாநிலத் தலைமையிலிருந்து அனுப்பப்பட்ட கடிதத்தை பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் கொடுத்தனர். இச்சந்திப்பில் மாவட்ட து. செயலாளர் குலாம், கிளைத் தலைவர் கவுஸ் முஹம்மது, கிளைச் செயலாளர் அப்துல் காதர், கிளைப் பொருளாளர் இப்ராஹீம், கிளை து.செயலாளர் ஜாசிம், கிளை உறுப்பினர்கள் இக்பால் மற்றும் நபில் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துக் கொண்டனர்.







