28 Oct 2009
ஹஜ் பயணக் குழுவினருக்கு வழியனுப்பு விழா
அய்யம்பேட்டை, சக்கராப்பள்ளி உள்ளிட்ட ஊர்களிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொள்வோரை வழியனுப்பும் விழா அண்மையில் சக்கராப்பள்ளி ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசல் வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
பாபநாசம் சட்டப்பேரவை உறுப்பினர் இரா. துரைக்கண்ணு, தொழிலதிபர் சோழன் நெடுமுடிக்கிள்ளி, ஜமாத் சபைத் தலைவர் ஓ.ஆர்.ஜே. பசீர் அகம்மது, அதிமுக சிறுபான்மைப் பிரிவுத் தலைவர் பி.ஏ. அஜ்ஜி, செயலர் ஏ. ஜாகீர் உசேன், அதிமுக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலர் சி. கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இப்பகுதியில் இருந்து சுமார் 50 பேர் ஹஜ் பயணம் மேற்கொண்டனர்.







